ராஜூவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி செவ்வாய்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தண்டை பெற்று வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பரோலில் வெளிவந்துள்ள நளினி, காட்பாடி அருகே பிரம்மபுரத்திலுள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
ராஜூவ் காந்தி கொலை வழக்கு:
இந்நிலையில் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 8 முறைக்கு மேல் தமிழக அரசால் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் கடந்த 32 ஆண்டுகளாக புழல் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.சென்னை புழல் சிறையில் இருந்து இன்று ஜாமினீல் வெளியே வந்த அவரை அவரது தாயார் அற்புதம்மாள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றார்.

பேரறிவாளனுக்கு ஜாமீன்:
முன்னதாக பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 1991ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக ஜாமீன் வழங்கபட்டுள்ளது. முதன்முறையாக ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் தனது தாயை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.தற்போது நிபந்தையுடன் ஜாமீன்வழங்கியுள்ளதால்,ஜோலார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று கையெழுத்திட வேண்டும்.மேலும், சிறையில் உள்ள மற்ற 6 பேருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பேரறிவாளன்.. மகனை பார்த்து மகிழ்ச்சியில் பொங்கிய தாய்..
7 பேர் விடுதலை:
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தனு, நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழ அரசு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பிலும் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சட்டபேரவையில் 7 பேர் விடுதலை குறித்து ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முருகன் போராட்டம்:
இதனிடயே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தனக்கும் பரோல் வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார். ஏனினும், அவருக்கு பரோல் வழங்குவது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று காலை முதல் முருகன் பரோல் கிடைக்கும் வரை உணவு உண்ண போவதில்லை என்று கூறி உண்ணவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதுக்குறித்து அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் சாப்பிட மறுத்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
