Diwali : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..! பிரதமர் மோடி வாழ்த்து
நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை- மோடி வாழ்த்து
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் தினமான தீபாவளிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாட தொடங்கியுள்ளனர். இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படுகிறது. இந்த நன்நாளில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் வாழ்த்து
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த மங்களப் பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தும் குடும்பத்தினர் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியை கொண்டாடுகள் என பதிவு செய்துள்ளார். இதே போல அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு விவகாரம்... உயிரிழந்தவர் வீட்டில் வெடிமருந்துகள்... டிஜிபி அதிர்ச்சி தகவல்!!
சமாதானத்தை நிலைநாட்டும் பண்டிகை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதானே தீபாவளி! தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும் என கூறியுள்ளார். இதை போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
தீபாவளிக்கு மறுநாள்.. அக்டோபர் 25 ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு