Asianet News TamilAsianet News Tamil

வீட்டிலேயே பிரசவம் பார்க்க ஆசைபட்ட உறவினர்கள்; துடி துடித்து உயிரிழந்த கர்ப்பிணி - திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், ரத்தப்போக்கு அதிகரித்த காரணத்தால் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

pregnant lady died while try to delivery at home in tirupattur district vel
Author
First Published Nov 8, 2023, 2:19 PM IST | Last Updated Nov 8, 2023, 2:19 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர்  பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (28) ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாது மகள் ஹேமலதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மேலும் சுகப்பிரசவத்தின் காரணமாக இரண்டு வயதில் மெய்யழகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹேமலதா இன்று காலை வயிற்று வலி அதிகமாக கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது பிரசவ வலி மேலும் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து விடுங்கள் என கூறியுள்ளனர்.

திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லை; பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கவுன்சிலர்கள் - தேனியில் பரபரப்பு

ஆனால் இதனை ஏற்காமல் மருத்துவமனையில் அனுமதி பெறாமல் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக ஹேமலதாவிற்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் ஹேமலதாவின் தொப்புள் கொடியை துண்டித்துள்ளனர். மேலும் பெண் வீட்டார்  108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர்களிடம் அருகிலுள்ள கொரட்டி மருத்துவமனைக்கு செல்லாமல் முதல் பிரசவம் ஆன குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நடந்தது எனவே  அங்கு செல்லுங்கள் எனக் கூறியதன் காரணமாக அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்தார்.

அறநிலைத்துறையை கலைப்பதா.? சேகர் பாபு நன்றாகத்தான் செயல்படுகிறார்- அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ பதில்

இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க கூறியும் கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே பிரசவம் ஆகி அதிக ரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios