தமிழக முதல்வர் பூரணநலம் பெற ஆர் எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் ஆர் கே நகர் அருட்கோட்டம் முருகன் கோவிலில் 506-அகன்ற மஹாதிருவிளக்கு பிரார்த்தனை 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடந்தது. 

இந்த பூஜையில் வடசென்னை (வடக்கு) மாவட்ட

ஜெ. பேரவை சார்பில் முதல்வர் ஜெயலலிதா பூரணநலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்றிட வேண்டி ஆர் கே நகர் 38-வது வட்டம் நேதாஜி நகரில் உள்ள அருட்கோட்டம் முருகன் திருக்கோவிலில் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த பூஜையில் 506 - மஹா அகன்ற திருவிளக்குகள் ஏற்றட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு பூஜையில் வடசென்னை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அகன்ற அகல் திருவிளக்கை கையில் ஏந்தி பிரார்த்தனை செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது 

நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர் எஸ் ஜெனார்த்தனம், மாவட்ட மீனவரணி செயலாளர் ஏ.கணேசன், இ.பாலமுருகன், ஆர். மதுரைவீரன், எஸ் எம் முருகன், வி. அலெக்ஸ், ஜெ எம் நரசிம்மன், கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் உள்பட பலர் இருந்தனர்