Asianet News TamilAsianet News Tamil

சீர்காழியில் இரவுக்குள் மின் விநியோகம் சரி செய்யப்படும்… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!!

சீர்காழியில் இரவுக்குள் மின் விநியோகம் சரி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

power supply will be restored in sirkali by night says senthil balaji
Author
First Published Nov 13, 2022, 6:28 PM IST

சீர்காழியில் இரவுக்குள் மின் விநியோகம் சரி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மழை பாதிப்பை கணக்கிட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்புங்கள்.! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

இதுமட்டுமின்றி மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் மின்சாரம் இன்றி இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சீர்காழி ஒரு சில பகுதிகளில் இன்றிரவுக்குள் மின்விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு..! ஏக்கருக்கு 30ஆயிரம் வழங்கிடுக..! தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும். சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக தீர்வு காணப்படும். பணி செய்யாத மின்வாரிய ஊழியர்கள்,அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சீர்காழியில் கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios