பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Pongal Train Ticket Booking 2023 Reservation Started Check Here For Full Update

அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி, ரயில் நிலைய கவுண்ட்டர்கள், ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி பயணிக்கவுள்ளவர் இன்று முதல் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.  மேலும் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்.13 ஆம் தேதி செவ்வாய்கிழமையும் ஜனவரி 12 ஆம் தேதி செல்பவர்கள் செப்.14 ஆம் தேதி புதன்கிழமையும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சூறாவளி காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க.. எச்சரிக்கை.!

அதே போல் ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்யவிரும்புபவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதியும்  பயணசீட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். பொங்கலுக்கு முந்தைய நாளும் பொங்கலன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் செப். 16 மற்றும் 17 ஆம் தேதிகளின் முறையே டிக்கெட்களை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:கணவன் இறந்த துக்கம் தாங்காத மனைவி உயிரிழப்பு… வேலூரில் நிகழ்ந்த சோக சமபவம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios