உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சூறாவளி காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க.. எச்சரிக்கை.!
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில பகுதியை ஒட்டியுள்ள வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க;- இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த மண்டலம், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதன் காரணமாக, வங்கக் கடலில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும்.
எனவே மீனவர்கள் வரும் 14ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, கூடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய துறையூகங்களில் 1-வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஆசை ஆசையாய் காத்திருந்த மணம்பெண்.. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.!