- Home
- Tamil Nadu News
- Chennai Rain: சென்னையில் இன்று அடிச்சு தும்சம் செய்யப்போகும் கனமழை.. வானிலை மையம் குளு குளு அப்டேட்!
Chennai Rain: சென்னையில் இன்று அடிச்சு தும்சம் செய்யப்போகும் கனமழை.. வானிலை மையம் குளு குளு அப்டேட்!
Rain: கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து நேற்று சென்னை, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். ஆனால் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து நேற்று சென்னை, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும்
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஜூலை 24ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலை உயரும்
இன்று முதல் ஜூலை 24 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதி இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.

