Asianet News TamilAsianet News Tamil

ஹாப்பி நியூஸ் மக்களே... பொங்கலுக்கு ஊருக்கு போலாம்... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

pongal special buses run from tomorrow said tamilnadu govt
Author
Tamilnadu, First Published Jan 10, 2022, 7:52 PM IST

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போழுது அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10.300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16768 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில், செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே. நகர் மாபோக பேருந்து நிலையத்தில், ECR கழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

pongal special buses run from tomorrow said tamilnadu govt

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருத்து நிலையத்தில், திண்டிவனம், விக்கிரவாண்டி. பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் ஈழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவணம் வழியாக புதுச்சேரி, கடலூா் செல்லும் பேருந்துக்கள் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோபம்பேட்டில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம் கள்ளக்குறிச்சி. காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம். திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

pongal special buses run from tomorrow said tamilnadu govt

இதனிடையே முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை வெளிச் சுற்றுச்சாலை (Quter Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இதர வாகணங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள எதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios