Asianet News TamilAsianet News Tamil

பொதுமக்களே எங்கேயும் போய்டாதீங்க.. இன்று முதல் வீடு தேடி வரும் 1000 ரூபாய்க்கான பொங்கல் பரிசு டோக்கன்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

Pongal Gift Token distribution from Today!
Author
First Published Jan 3, 2023, 9:38 AM IST

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. வீடு வீடாக சென்று நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்க உள்ளனர். 

Pongal Gift Token distribution from Today!

நாள் ஒன்று 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும்  8ம் தேதிக்குள் டோக்கன் வழங்கும் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டோக்கனில் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Pongal Gift Token distribution from Today!

பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios