ஜனவரி 2வது வாரம் வரை பருவ மழைக் காலம் நீடிப்பது சற்று மகிழ்ச்சியை அளிப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது.
தேதி அடிப்படையில், வடகிழக்கு பருவ மழை மிகக் குறைந்த அளவில் பதிவாகி, பற்றாக்குறை ஆண்டாக இருந்தாலும், ஜனவரி வரை நீடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 2013ம் ஆண்டை போல, ஜனவரி வரை வடகிழக்கு பருவ மழை நீடித்து, ஓரளவு மழை அளவு சரிகட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
பொங்கலுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி நகரலாம். இது வெறும் ஆரம்பநிலை கணிப்புதான். "இதனை அடிப்படையாக வைத்து கொண்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்".
கடைசியாக 1995ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் மழை பெய்தது. அதற்கு முன்பு 1986ம் ஆண்டு மழை பெய்துள்ளது. 1986ம் ஆண்டை எடுத்து கொண்டால், பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்களும் மழை பெய்து, பண்டிகை கொண்டாட்டத்தையே முடக்கியதாக எனது நண்பர் வானிலை நிபுணர் ஷிவா தெரிவித்தார்.
புத்தாண்டில் அடுத்த நிலை குறித்து பதிவு செய்கிறேன். தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது, இன்னும் சிறிது நேரம் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
