- Home
- Tamil Nadu News
- சென்னை டூ ராமேஸ்வரம் புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு குட் நியூஸ்! முழு விவரம் இதோ!
சென்னை டூ ராமேஸ்வரம் புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு குட் நியூஸ்! முழு விவரம் இதோ!
ஆன்மிக நகரான ராமேஸ்வரத்துக்கு தாம்பரம் மற்ரும் கோவையில் இருந்து சிறப்பு முன்பதில்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ராமேஸ்வரத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
தமிழகத்தின் ஆன்மிக நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் விளங்கி வருவது ராமேஸ்வரம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவும், பாம்பன் பாலம், தனுஷ்கோடி ஆகியவற்றை பார்வையிடவும் தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில், சென்னை தாம்பரம், ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம்-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில்
அதாவது தாம்பரம்-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண்: 06017) தாம்பரத்தில் இருந்து நாளை (டிசம்பர் 29 திங்கட்கிழமை) இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை) இரவு 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வ.எண்: 06018) மறுநாள் காலை 9.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
எந்தெந்த இடங்களில் நிற்கும்?
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 16 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். முன்பதில்லாத ரயில் என்பதால் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம்.
கோவை-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்
இதே போல் கோவை, ராமேஸ்வரம் இடையேயும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்: 06123) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்: 06124) மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

