அடுத்து எந்த தேர்தல் வேண்டுமென்றாலும் வரட்டும், யார் வேண்டுமானாலும் எதிர்த்து நிற்கட்டும் நாம் நாம் தான் ஜெயிக்கணும் என வியூகங்களையும் வகுத்துவருகிறார்  தினகரன்.

 அடுத்து வரும் நாடாளு மன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள், கூட்டணி, தேர்தல் பட்ஜெட், வேட்பாளர் தேர்வு  என அதகளம் செய்து வருகிறார் தினகரன். ஜெயலலிதாவிற்கு ஆகட்டும் தினகரனுக்காகட்டும் பக்கபலாமாக இருப்பது ஜெயா  தொலைகாட்சி தான் மக்களிடம்  கொண்டு சேர்க்கின்றது. எனவே ஜெயா தொலைகாட்சியை மறு கட்டமைப்பு செய்வதில் தீவிரமாகியிருக்கிறார் அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன்.

 ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இளவரசியின் மகன் விவேக் ஜெயா தொலைகாட்சியை நிர்வகித்து வந்தார். அந்த சமயத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த தினகரன் தனியாகச் செயல்பட ஆரம்பித்த புதில் பல தொலைக்காட்சிகள் தினகரனை மாறி மாறி பேட்டி எடுத்து வந்த நேரம் அது. ஆனால்,  அப்போது தினகரனின் செய்திகள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுவருவதாக தினகரன் ஆதரவாளர்களே வெளிப்படையாக ஊடகங்களிடம் தெரிவித்தார்கள். இதனையடுத்தே தினகரனின் மனைவி அனுராதாவின் கைக்கு வந்தது ஜெயா தொலைக்காட்சி பொறுப்பு.

இதனை அடுத்து எங்கள் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டால் அரசு கேபிள் டிவியில் பின்னுக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள் என்பதால் பல தொலைக்காட்சிகள் எங்கள் செய்திகளை ஒளிபரப்புவதில்லை என்று தினகரன்  ஆதரவாளர்கள் பகிரங்கமாக ஓலமிட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கிவிட்டதால் இப்போது தன்னிடம் இருக்கும் ஜெயா டிவியின் செய்தி தொலைகாட்சியின் புரோக்ராம் மொத்தமாக மாற்றியமைக்கிராராம்  தினகரன்.

அதேபோல ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது  அதிரடியாக செயல்பட்டனர். செய்திப் பிரிவில் துடிப்பாக இருந்த பலர்  நிர்வாகத்தில் நெருக்கடி கொடுத்த காரணங்களால் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். தற்போது தலைமை இன்றி தவிக்கும் அந்த தொலைக்காட்சி தற்போது ஆட்டம் கண்டுள்ள நிலையில்,  தலைமை முதல் அந்தச் செய்தியாளர்கள் வரை அனைவரையும் மீண்டும் ஜெயா டிவிக்கு கொண்டு வர முயற்சித்து வருகிராராம். 

ஜெயலலிதா இருந்த சமயத்தில் செயல்பட்ட அவர்களே மீண்டும் திரும்பினால் தேர்தல் பிரசார கவரேஜுக்கும் அரசியல் கள ரீதியான சில விஷயங்களுக்கும் உதவியாக இருக்கும்” என்று தினகரன் உத்தரவிட்டதை அடுத்து,  தலைமை செய்தி ஆசிரியர் முதல் ஆபீஸ் பாய் வரை மொத்த எக்ஸ் ஊழியர்களுக்கும்  அழைப்பு கடுதாசி பறந்துள்ளதாம்.