தமிழகம் முழுவதும் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழக்கப்படும் இம்முகாமிற்கென 1624 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  

அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையம், பஸ் நிலையம், ரயில்நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இம்முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்துகள் போடப்படுகிறது.