மதக்கலவரத்தை தூண்டும் இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். 

மதக்கலவரத்தை தூண்டும் இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. அதை என் ஐ ஏ அமைப்பினர் சோதனை செய்கிறார்கள். அதற்கு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது தவறு இல்லை. ஆனால் பயங்கரவாத இஸ்லாமியர்கள் சிலர் தமிழகத்தில் கிட்டத்தட்ட 22 இடங்களில் ஒரே மாதிரியான பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. குறிப்பாக பிஜேபி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி வீடுகள் தொழிற்சாலைகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மதுரையில் கூட பெட்ரோல் கொண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசுவோருக்கு இதான் தண்டனை... எச்சரிக்கை விடுத்த தென் மண்டல ஐஜி!!

இது குறித்து கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம். மதுரை போலீஸ் கமிஷனர் உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிப்போம் என கூறியுள்ளார். அது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஆனால் சொல்வது மட்டுமல்லாமல் செய்ய வேண்டும். இந்த பயங்கரவாதிகளை காவல்துறை கைது செய்யாமல் இருப்பது ஊக்கத்தை கொடுக்கும். தமிழகத்தில் அரசாங்கமும் உளவுத்துறையும் சரியில்லை. பயங்கரவாத இஸ்லாமியர்கள் தமிழகத்தில் பல கலவரங்களுக்கு திட்டமிட்டுள்ளார்கள். அவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். 22 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட 2 பெண்கள்... ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்!!

கோயம்புத்தூரில் ஒரு ரகசிய அமைப்பை இஸ்லாமியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். பயங்கரவாத முஸ்லிம்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். காவல்துறையினர் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மதுரையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து கோயம்புத்தூர் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். முன்னதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மதுரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணன் வீட்டில் மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார்.