Police seized one of the mysterious men who had hacked a house in Nellai and robbed two sovereign jewelry and two cars.
நெல்லையில் வீட்டில் இருந்த பெண்ணை கட்டி போட்டுவிட்டு 100 சவரன் நகை மற்றும் 2 கார்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரில் மர வியாபாரி வீட்டில் திடீரென மர்ம நபர்கள் 3 பேர் உள்ளே புகுந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த பெண்ணை கட்டி போட்டுவிட்டு 100 சவரன் நகையை கொள்ளையடித்தனர். மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களையும் ஓட்டி சென்றனர்.
இதையடுத்து வெளியே சென்றிருந்த மர வியாபாரி வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த பெண் கட்டி போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். தகவலை தெரிந்து கொண்ட அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அனைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து மதுரை பைபாஸில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் 3 பேரில் ஒருவர் போலீசார் கைது செய்யப்பட்டார்.
