உலகமெங்கும் உள்ள அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில்  இருகிறார்கள் ஆனால் விஜய் ரசிகர்களோ சோகத்தில் இருகிறார்கள். இது வரை இல்லாத ஸ்டைல் பிரமாண்டம் இவை எல்லாம் அஜித்தின் விவேகம் டீசரில் உள்ளது. டீஸரின் பாராட்டு வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்கள் அஜித் ரசிகர்கள்.

இப்படி இருக்க விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறால் செய்த விஷயத்தால் விஜய்க்கு பெரிய அவமானம் நேர்ந்துள்ளது.  பிரச்சனை யாரோ செய்ததுக்கு விஜய்க்கு இந்த பிரச்சனை தேவையா? என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. என்ன தெரியுமா?

பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு. சமீபத்தில் கூட உலக நாயகன் கமல்ஹாசன் மீது வழக்கு மற்றும் காவல்துறையில் புகார் ஆகியவை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று விஜய் மீது இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர் ஒருவர் வரைந்த விஜய்யின் ஸ்டில் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த ஸ்டில்லில் ஷூ அணிந்த விஜய் திரிசூலத்தை கையில் வைத்து நடனமாடுவது போல் உள்ளது. இந்த புகைப்படம் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இந்து முன்னணி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.