தினமலர் செய்தியாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபலமான பத்திரிக்கைகளில் ஒன்றான தினமலர் பத்திரிக்கை நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர்; சதாசிவம்.

இவர் நேற்று வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தபோது, சென்னை வியாசர்பாடி காவல்நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தி இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சதாசிவம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அவர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
