எந்தவொரு விசயத்தையும் பிளான் பண்ணி செய்யனும்; மின்வாரியத்தை சாடும் அன்புமணி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முறையாக காலக்கெடு வழங்காமல் மக்கள் மீது திணித்ததன் விளைவாக தற்போது திட்டத்தில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு வருகின்ற 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் வீட்டிற்கு தொடர்பில்லாத நபர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதால் வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!
மின் இணைப்புடன் பொய்யாக இணைக்கப்படும் ஆதார் எண்கள்; வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி
எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முறையான திட்டமிடலும், காலக்கெடுவும் தேவையாகும். போதிய காலக்கெடு வழங்காமல், நோக்கம் என்ன? என்பதை தெரிவிக்காமல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை மக்கள் மீது திணித்ததன் விளைவு தான் இதுவாகும்!
மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைப்பதில் எத்தகைய குழப்பங்கள் நடந்துள்ளன? அதற்கான காரணங்கள் என்ன? அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும்? அதை மின்வாரியம் எவ்வாறு சரி செய்யப்போகிறது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!
ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு தற்கொலை; மதுரையில் உணவக ஊழியர் விபரீத முடிவு
மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.