Asianet News TamilAsianet News Tamil

காற்று மாசு தமிழகம் முன்னிலை.. 90 லட்சம் பேரில் 27% இந்தியர்கள் உயிரிழப்பு.. அன்புமணி ஆதங்கம்..

"மக்களைக் காப்பாற்றுவதற்காக காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

PMK Leader Anbumani Tweet About Air pollution death
Author
Tamilnádu, First Published May 18, 2022, 3:31 PM IST

"மக்களைக் காப்பாற்றுவதற்காக காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு...! வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் ...! காங்கிரஸ் அறிவிப்பு

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2019-ம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம்; இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் அதிர்ச்சியளிக்கிறது.

உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27% இந்தியர்கள் என்பதிலிருந்தே இந்தியா எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை உணரலாம். தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்களை இழப்பதில் தவறில்லை என்ற எண்ணமே இந்த நிலைக்கு காரணம் ஆகும். இது மிகவும் ஆபத்தானது.

பொருளாதாரம் ஈட்டுவதற்காகத்தான் காற்றையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறோம். ஆனால், மாசுக்களால் 2019ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 2.73 லட்சம் கோடி (1% of India's GDP) ஆகும். ஆக எதையும் பெறாமலேயே நிறைய இழக்கிறோம்.

காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. எனவே, மக்களைக் காப்பாற்றுவதற்காக காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அன்புமணி கூறியுள்ளார்.
 

மேலும் படிக்க: பாமக முக்கிய பிரமுகரை தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜக போட்ட ஸ்கெட்ச்.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே !

Follow Us:
Download App:
  • android
  • ios