பாமக முக்கிய பிரமுகரை தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜக போட்ட ஸ்கெட்ச்.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே !

திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தவாக நிறுவனர் வேலுமுருகனின் முன்னாள் மனைவி காயத்ரி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

The BJP leader joined in the presence of Tamil Nadu BJP leader Annamalai

திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர் மீது அதிருப்தியில் இருக்கும் உறவினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை கட்சியில் சேர்ந்து அவர்களுக்கு நெருக்கடி தரும் புது அஸ்திரத்தை தமிழக பாஜக எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கீழான பாஜக பல போராட்டங்களிலும், ஆளுங்கட்சியை எதிர்த்து செய்யும் அரசியலிலும் முன்னிலை வகிக்கிறது.

The BJP leader joined in the presence of Tamil Nadu BJP leader Annamalai

இந்த நிலையில் பிற கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத்தலைவர் பாஜகவில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்துள்ளார். இது காஞ்சிபுரம் பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆ. செந்தில்குமார் என்னும் பா. ம. க. வின் துணைத் தலைவர் கடந்த 2003ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் நகரில் தொழிற்சங்கத் தலைவராக பாமகவில் தனது அரசியல் வாழ்வை துவங்கினார்.

பிறகு 2005ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராகவும், 2011ஆம் ஆண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனார். பிறகு 2015ஆம் ஆண்டில் மாவட்ட தலைவராக காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்தார். 2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகாலம் பாமகவில் துணைத்தலைவராக பதவி வகித்தார்.

The BJP leader joined in the presence of Tamil Nadu BJP leader Annamalai

இவர் பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த வாரம் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா சேர்ந்துள்ள நிலையில், பாமக முக்கிய பிரமுகர் பாஜகவில் சேர்ந்துள்ளது பாமகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு பிரமுகர்கள் இன்னும் சேருவார்கள் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

இதையும் படிங்க : ஷாக்கிங் நியூஸ்! சென்னை மெரினாவில் தோண்ட தோண்ட சாராய குவியல் - போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

இதையும் படிங்க : உஷார் மக்களே !! தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை அடிச்சு ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios