Asianet News TamilAsianet News Tamil

கஞ்சா விற்ற பாமக மா.செ. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்..!

சென்னை மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் சரவணன் கஞ்சா விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

pmk District Secretary Saravanan sale in kanja
Author
Chennai, First Published Sep 9, 2018, 12:57 PM IST

சென்னை மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் சரவணன் கஞ்சா விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக இருந்தவர் சரவணன். பல்லவன் சாலை எஸ்.எம்.நகரில் கஞ்சாவை விற்பனை செய்த வழக்கில் இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் அரசியட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர் ஈடுபடட்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.pmk District Secretary Saravanan sale in kanja

இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சரவணனை, பாமகவில் இருந்து நீக்குவதாக அதன் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் தானா தெருவை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடடதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

pmk District Secretary Saravanan sale in kanja

கட்டிசயின் நிறுவனர் டாட்கடர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவருடன் கட்சி தொண்டர்களும் பொறுப்பாளர்களும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios