லஞ்சமாக 20 ஆயிரம் கேட்ட உதவி பொறியாளர்.. ? வித்தியாசமான போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை மாற்றுவதற்கு 20 ஆயிரம் கேட்ட  மின்வாரிய உதவி பொறியாளரிடம் சில்லறைகளை வழங்கி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

PMK Conducted protest against Electricity Board for transformer issue

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள தேவனேரி பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக மின்மாற்றி பழுந்தடைந்தால் அடிக்கடை மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

குறிப்பாக பள்ளி மாணவர்கள் தேர்வு நேரங்களில் மின் வெட்டு பிரச்சனையால் படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மின்மாற்றியை மாற்றக்கோரி கிராம மக்கள் மற்றும் பாமக சார்பில் உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டப்படுகிறது.

PMK Conducted protest against Electricity Board for transformer issue

இந்நிலையில் மின்மாற்றியை மாற்ற வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் செலவாகும் என்றும் அதற்கு அலுவலகத்தில் போதிய பணம் இல்லை என்றும் உதவி பொறியாளார் கூறியதாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க:நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி மரணம்: பெற்றோர் அச்சம்

இதனை கண்டித்து பாமகவினர் இன்று மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரூ.20 ஆயிரத்தை சில்லறையாக தாம்பூல தட்டில் வைத்து கொண்டு, தாரை தப்பட்டை அடித்து ஊர்வலமாக சென்று, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

PMK Conducted protest against Electricity Board for transformer issue

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கும் போது, மின்மாற்றியை மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கும், உள்ளூர்காரர்களுக்கும் இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறதாக கூறினர். 

மேலும் படிக்க:நடிகர் சூரியின் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios