6வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! முழுமையான பயணத் திட்டம் இதோ!
பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு கோவை மற்றும் சேலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோவுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டில் ஆறாவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார். நாளை விமானம் மூலம் கோவை வரும் பிரதமரின் தமிழகப் பயணத் திட்டம் குறித்த முழுமையான விவரத்தைப் பார்க்கலாம்.
பிரதமர் மோடி இன்று நாளை (திங்கட்கிழமை) மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமோகா விமான நிலையத்தில் இருந்து கோவைக்குப் புறப்படுகிறார். இந்திய விமான்ப்படையின் தனி விமானம் மூலம் வரும் பிரதமர் மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைவார்.
விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகச் செல்லும் பிரதமர் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள பேரணியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்திப்பார். மாலை 5.45 முதல் 6.45 வரை இந்தப் பேரணி நடைபெறும். பேரணிக்குப் பின் கார் மூலம் சர்க்யூட் ஹவுஸ் செல்வார்.
இரவு கோவையில் தங்கும் பிரதமர் மறுநாளை காலை 9.30 மணிக்கு சர்க்யூட் ஹவுஸில் இருந்து விமான நிலையத்திற்குச் செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடுக்கு காலை 10.15 க்குச் சென்றடைவார். பிறகு, அங்கிருந்து 11.40 மணிக்குப் புறப்பட்டு மீண்டும் தமிழகத்தில் சேலம் மாவட்டத்திற்கு பிறபகல் 12.50 மணிக்கு வருவார்.
சேலத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்தப் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு பகல் 2 மணிக்கு சேலம் விமான நிலையத்திற்கு கார் மூலம் செல்கிறார். அங்கிருந்து 2.25 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுவார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு கோவை மற்றும் சேலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோவுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.