கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் பக்கம் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குப் பலம் கிடைக்க வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

பிரதமர் மோடி பிரார்த்தனை

மேலும் அவர், "காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கரூர் நெரிசல் சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து, உடனடி நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.