அப்படியெல்லாம் பண்ணாதீங்க: வானதி சீனிவாசனுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும், அரசியலமைப்பின் 128ஆவது திருத்த மசோதா, 2023 - மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு நாரி சக்தி வந்தன் அதினியம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதம் முடிந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று அங்கும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மசோதா நிறைவேற காரணமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால், பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவகத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிர் அணி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நெல்லை - சென்னை வந்தே பாரத்: டிக்கெட் விலை எவ்வளவு?
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மகளிர் இடஒதுக்கீடு மசோதா சாதாரண சட்டமல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்.” என குறிப்பிட்டார். முன்னதாக, இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பாஜக அலுவலகம் வந்தார். அப்போது, அவருக்கு பாஜக மகளிர் அணியினர் உள்பட திரளான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் காலில் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்சியடைந்த பிரதமர் மோடி, சட்டென கடுப்பானார். அதன்பிறகு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என வானதி சீனிவாசனுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.