plots for free to poor people said minister jayakumar

லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை.....யாரெல்லாம் அந்த அதிர்ஷ்டவாசிகள்...

தமிழக அரசின் 2017-18 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி காவல் துறைக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் தாக்கலில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

30 கோடி ரூபாய் செலவில் 49 புதிய காவல் நிலையங்கள் கட்டப்படும் என்றும் காலியாக உள்ள 10,500 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று காவல்துறை வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சலுகையாக உள்ளது .

மேலும் வருவாய்துறை , வேளாண் துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஜெயகுமார்

குறிப்பாக , ஏழை குடும்பங்களுக்கு 3.5 லட்சம் இலவாச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இதன் மூலம் இதுவரை சொந்தமாக வீடு இல்லாதவர்கள், இந்த வீடு மனை பட்டாக்கள் மூலம் சொந்த வீடு கட்டி குடி புகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது . ஆனால் எவ்வளவு விரைவாக இந்த சேவை மக்களுக்கு சென்றடையும் என்பதில் தான் விஷியமே இருக்கு