ஷாக்கிங் நியூஸ்.. பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிரடி உயர்வு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில்;- ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பயணிகளின் நலன் கருதி, கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக செல்லவும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பிளாட்பார்ம் கட்டணம் ரூ.10லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது.
* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம்
* சென்னை எக்மோர்
* தாம்பரம்
* காட்பாடி
* செங்கல்பட்டு
* அரக்கோணம்
* திருவள்ளூர்
* ஆவடி
ஆகிய 8 முக்கிய ரயில் நிலையங்களுக்கு மட்டும் பொருந்தும். இதற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.