Asianet News TamilAsianet News Tamil

நொறுக்கு தீனிகளை இனி இதிலெல்லாம் கொண்டு வரக்கூடாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி...!

தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் பள்ளிகளிலும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Plastic ban...School Education Action
Author
Tamil Nadu, First Published Dec 21, 2018, 4:54 PM IST

தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் பள்ளிகளிலும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில்  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன,.Plastic ban...School Education Action

இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது. Plastic ban...School Education Action

மேலும் மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 1-ம் தேதி முதல், பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios