மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்… குற்றவாளிக்கு ஐஎஸ்ஐஎஸ்-யுடன் தொடர்பா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!!
மங்களூரு ஆட்டோ வெடிப்பை நிகழ்த்தியவருக்கு பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாரிக் குக்கர் வெடிகுண்டுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மங்களூரு ஆட்டோ வெடிப்பை நிகழ்த்தியவருக்கு பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாரிக் குக்கர் வெடிகுண்டுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக ஷாரிக் கடந்த சனிக்கிழமையன்று அவர் பயணம் செய்த ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஷாரிக் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். இதுக்குறித்த விசாரணையில் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சென்ற ஷாரிக், அங்கிருந்த விடுதி ஒன்றில் தங்கியதாகவும் மேலும் பல பொலி அடையாள அட்டைகளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! சதி திட்டத்தின் பின்னனி என்ன..? ஷாரீக்கிடம் என்ஐஏ போலீசார் விசாரணை..?
இதுஒருபுறம் இருக்க மறுபுறம் மைசூரில் உள்ள ஹாரிக் தங்கியிருந்த வாடகை வீட்டில் உளவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அங்கிருந்து வெடிபொருட்கள், ஒரு மொபைல் போன், இரண்டு போலி ஆதார் அட்டைகள், ஒரு பான், டெபிட் கார்டு மற்றும் பயன்படுத்தப்படாத சிம் ஆகியவற்றை உளவுத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனிடையே ஆட்டோ குண்டுவெடிப்பை நிகழ்த்திய முகமது ஷாரிக் குக்கர் வெடிகுண்டுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதை காட்டுகிறது.
இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி
அந்த புகைப்படத்தில் ஷாரிக் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஸ்டைல் சர்க்யூட் வயர்களைக் கொண்ட குக்கரை வைத்திருப்பதைக் காணலாம். ஷாரிக் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் அனைத்து போலி ஆதார் அட்டைகளையும் வெவ்வேறு வழிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் நிர்வகித்ததாகவும் உளவுத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.