காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின்போது, தூத்துக்குடி அருகே உள்ள வங்கி ஒன்றின் மீது பெட்ரோல் வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் திமுக உள்ளிட் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போரட்டம் நடத்தப்பட்டது. அப்போது மாரிமுத்து என்பவர், பெட்ரோல் குண்டுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
போராட்டக்குழு, அங்குள்ள வங்கி ஒன்றின் அருகே வந்தபோது, கையில் இருந்த பெட்ரோல் குண்டை எடுத்து வங்கியில் வீசியுள்ளார். இதில் காவல் ஆய்வாளர் ஒருவர் காயம் அடைந்தார். இதனை அடுத்து, மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
