Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் வம்பிழுக்கும் பீட்டா! - ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

peta case against supreme court
peta case against supreme court
Author
First Published Jul 6, 2017, 6:00 PM IST


ஜல்லிக்கட்டு போட்டியில் மிருகவதை நடந்துள்ளதாக கூறி, பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். மேலும், தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்யவும் அவர்கள் கோரியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் இளைஞர்களால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம், புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இது மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும் ஜல்லிக்கட்டு குறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடுப்பு சட்டத்தின்  சில பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

peta case against supreme court

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பீட்டா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

மிருகவதை நடைபெற்றதற்கான வீடியோ ஆதாரத்துடன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழக அரசின் மிருகவதை திருத்த சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே நடைபெற்று கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன்,கதிராமங்கலம் போராட்டங்கள் GST பிரச்சனைகளை திர்சை திருப்புவதற்காக ஜல்லிக்கட்டு பிரச்சனையை பீட்டா மீண்டும் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios