12ஆம் ஆண்டு வெளியான 'ஆளண்டாப் பட்சி' நாவல் ஃபயர் பேர்ட் (Fire Bird) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்கு இந்தியாவின் முக்கிய இலக்கியப் பரிசுகளில் ஒன்றான JCB பரிசு கிடைத்துள்ளது.

எழுத்தாளர் பெருமாள்முருகன் தனது 'ஆளண்டாப் பட்சி' நாவலுக்காக இலக்கியத்திற்கான ஜேசிபி (JCB) பரிசைப் பெறுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலை ஜனனி கண்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பென்குயின் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் விவசாயக் குடும்பம் ஒன்றின் வாழ்வை இந்த நாவல் சித்தரிக்கிறது. இந்த நாவலின் தமிழ்த் தலைப்பாக உள்ள 'ஆளண்டாப் பட்சி' என்பது கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெறும் பறவை ஆகும். மனிதர்களை அருகில் அண்ட விடாத இந்தப் பறவையைப் போல இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களும் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைப் போராட்டமே இந்த நாவல்.

உ.பி.யில் ஹலால் சான்றிதழ் கொண்ட உணவுப் பொருட்களுக்கு தடை! யோகி அரசு அதிரடி உத்தரவு

Scroll to load tweet…

12ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் ஃபயர் பேர்ட் (Fire Bird) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் நிலத்தோடு பிணைந்திருக்கும் மனிதர்களின் கதையை பெருமாள்முருகன் வியக்கத்தக்க வகையில் எழுதியிருக்கிறார் என்றும் ஜனனி கண்ணனின் மொழிபெயர்ப்பு உலகத்தரத்தில் இருப்பதாகவும் பரிசைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவின் தலைவர் ஸ்ரீநாத் பேரூர் கூறியுள்ளார்.

பெருமாள்முருகனுக்கு பரிசுத் தொகை ரூ.25 லட்சமும், டில்லி சிற்பக் கலைஞர்கள் துக்ரால் மற்றும் டாக்ராவின் "உருகும் கண்ணாடி" (Mirror Melting) என்ற சிற்பமும் கேடயமும் வழங்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணனுக்கும் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

இந்தப் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அவர்களின் நூல்கள் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருந்தால் மொழிபெயர்ப்பாளருக்கு ரூ. 50,000 வழங்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய பாம்பன் பாலம்! விரைவில் திறப்பு விழா!