Perarivalan father Kailidasan has been admitted to Rajiv Gandhi Government Hospital due to illness.

பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஜோலார் பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

26 ஆண்டுகளுக்கு அவரது தந்தையின் உடல்நலத்தை கவனித்து கொள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. 

ஆகஸ்ட் மாதம் 24 ந்தேதி பரோல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

இந்த பரோல் கடந்த மாதம் 24 ஆம் தேதி முடிவடையும் நிலையில் பரோல் காலத்தை நீட்டிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். 
அதைதொடர்ந்து மேலும் ஒரு மாத காலம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.