வேலூர் 

வேலூரில் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் 1–ஆம் தேதி பென்சன் வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நலன் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் விஜயன், நிர்வாகிகள் ராஜா, சக்கரவர்த்தி, சம்பத், மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் 1–ஆம் தேதி பென்சன் வழங்க வேண்டும், 

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்பலன் மற்றும் நிலுவை தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து உடனடியாக வழங்க வேண்டும், 

ஓய்வூதி பெறும் நாளில் பணப்பலன் வழங்க வேண்டும், 

பென்சன் தொகைக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உமாபதி நன்றி தெரிவித்தார்.