பரந்தூர் விமான நிலையம்.. 13 கிராம மக்கள் நடத்திய போராட்டம் தற்காலிக வாபஸ்..
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் போராட்டம் வாபஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிடுவதாக விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் போராட்டம் வாபஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிடுவதாக ஏகனாபுரம் விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய விமானநிலையத்திற்கு எதிராக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:“சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவையா ? நான் இருக்கும் வரைக்கும் நடக்காது” - கொதிக்கும் சீமான்!
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டதை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி கோட்டையை நோக்கி நடத்தவிருந்த பேரணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைத்து விதமான போராட்டத்தையும் கைவிடுவதாக விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:Parandur Airport : பரந்தூர் விமானநிலைய நிலம் கையகப்படுத்தலில் ஊழலா? - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!
தமிழக அரசு விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஏதாவது அறிவிப்பு கொடுத்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோமென போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்