"அம்மா எக் நூடுல்ஸ் வேண்டும்" - முட்டை வாங்கி வர தாமதமானதால் மகன் எடுத்த விபரீத முடிவு!
தங்களுக்கு பிடித்த பொருள் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் எத்தனையோ நபர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பண்ருட்டி அருகே நடந்த ஒரு சம்பவம் உண்மையில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு ஊரில், ஒருவர் தனது தாயிடம் தனக்கு பிடித்த முட்டை நூடுல்ஸ் செய்து தருமாறு கேட்டுள்ளார். அவருக்கு பிடித்த உணவுகளில் அதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. மகன் நூடுல்ஸ் கேட்டதால் அதை செய்ய ஆயத்தமாகியுள்ளார் அந்த தாய்.
சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி: மக்களே உஷார் - போலீஸ் எச்சரிக்கை!
அப்போது தான் வீட்டில் முட்டை இல்லாததை பார்த்துள்ளார், உடனே நூடுல்ஸ் செய்ய முட்டை வாங்குவதற்காக அந்த தாய் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் கடைக்கு சென்ற தாய் மீண்டும் வீடு வருவதற்கு தாமதமான நிலையில், அந்த மகன் தனது உயிரை மாய்துகொண்டுள்ளார்.
தனக்கு பிடித்த உணவுப் பொருள் உடனே தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில் அந்த நபர் தனது உயிரை மாய்துகொண்டது கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடித்த உணவு செய்து தர தாமதமானதெல்லாம் ஒரு காரணமாக காட்டி. ஆத்திரத்தில் அந்த மகன் உயிரை மாய்துகொண்டது முறையல்ல என்று பலரும் கூறி வருகின்றனர்.
இளம் வயதில் கோவம் வருவது என்பது இயல்பான ஒன்றுதான், ஆனால் விலைமதிப்பில்லாத உயிரை அந்த வீண் கோவத்திற்கு இளைஞர்கள் பலிகொடுப்பது நல்லதல்ல என்று மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.