தென் மாவட்டங்களில் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தென் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.

Order to set up additional relief camps in southern districts sgb

குறைந்த நேரத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க வேண்டிய சவாலான கட்டத்தில் இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேவையான பகுதிகளில் கூடுதல் நிவாரண முகாம்களை விரைந்து ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தென் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "தென் மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புகள் - நிவாரண உதவிகள் குறித்து, மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் கனமழை: பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு ஆலோசனை

அப்போது, குறைந்த நேரத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க வேண்டிய சவாலான கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். தேவையான பகுதிகளில் கூடுதல் நிவாரண முகாம்களை விரைந்து ஏற்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, தொடர் கனமழையால் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. #டெல்லி_ஒரு
_கேடா_நீரோ_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேச இருக்கிறார். நாளை இரவு 10.30 மணிக்கு நடைபெறும் இந்தச் சந்திப்பில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios