TNPSC : லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள்.. ஆனால் குரூப்-4 தேர்வில் 6,244 பணியிடங்களுக்கே தேர்வு- சீறும் ஓபிஎஸ்

இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 
 

OPS Condemns TNPSC Group 4 Exam for Filling Less Vacancies KAK

குரூப் 4 தேர்வு அறிவிப்பு

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து கொண்டு இருக்கிறது. 2021-ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், இன்று ஐந்து இலட்சமாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் பெருமளவுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

TNPSC Exam Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு.. காலியிடங்கள் எத்தனை?

OPS Condemns TNPSC Group 4 Exam for Filling Less Vacancies KAK

6,244 இடங்களுக்கே தேர்வு அறிவிப்பு

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் ஆண்டிற்கு 70,000 என்ற வீதத்தில் நிரப்பப்பட வேண்டுமென்று நான் ஏற்கெனவே எனது அறிக்கைகள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்கூட 55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், இன்று குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில் வெறும் 6,244 இடங்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பது இளைஞர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கின்ற நிலையில், ஒரே ஒரு முறை தான் கிட்டத்தட்ட பத்தாயிரம் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

OPS Condemns TNPSC Group 4 Exam for Filling Less Vacancies KAK

இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு

இவர்கள்கூட பணியில் முழுமையாக சேர்ந்ததாக தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் 6,244 குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளி வந்திருக்கிறது. இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது.

தி.மு.க. அரசின் இந்த அறிவிப்பு மூலம் அரசுப் பணிகள் வெகுவாக பாதிப்படையும் என்பதோடு, இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நிலையில், குறைவான எண்ணிக்கையில் தேர்வு அறிவிப்புகளை வெளியிடுவது, ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்து செலவை மிச்சப்படுத்த தி.மு.க. அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அப்பாடா.. இனி சில்லரை சண்டையே இருக்காது.. சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ டிக்கெட் வசதி.!

OPS Condemns TNPSC Group 4 Exam for Filling Less Vacancies KAK

ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்பிடுக

இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகநீதியினைக் கருத்தில் கொண்டும், அரசின் நலத் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப காலிப் பணியிடங்களை நிரப்பவும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்பவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios