Opposition for NEET exam protest under head of vermani

நீட் தேர்வு விலக்கு கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும், நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசு ஏற்கவில்லை. இதையொட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.

தமிழகத்தின் மருத்துவ படிப்புக்கு, ஏழை எளிய மாணவர்கள் மிகவும் சிரமம் அடையும் நிலை ஏற்படும். எனவே, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திராவிடர் கழகம் சார்பில், அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நீட் தேர்வுக்கு வில்க்கு கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட பல்வேறு கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.