Tamil-Sanskrit:பேசும் தமிழுக்கு ரூ.74 கோடி! பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ் வளர்ச்சிக்காக ரூ.74 கோடியும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.1,488 கோடியும் ஒதுக்கீடு செய்த விவரம் வெளியே வந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ் வளர்ச்சிக்காக ரூ.74 கோடியும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.1,488 கோடியும் ஒதுக்கீடு செய்த விவரம் வெளியே வந்துள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணைஅமைச்சர் சுபாஷ் சர்க்கார் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மத்திய கல்வித்துறை இணைஅமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
மேற்கு வங்கத்துக்கு முதல் வந்தே பாரத் ரயில்: 30ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சில்(ஐசிசிஆர்) 8 சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்துக்கு பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது.போலந்து பல்கலைக்கழக்தில் தமிழுக்காகதனி இருக்கை அமைக்கப்பட்டது.
தமிழ் மொழிவளர்ச்சிக்காகவும், மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் மத்திய அரசு சார்பில், சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்(சிஐசிடி) உருவாக்கப்பட்டது. தமிழ் மொழியை பரப்பவும், ஊக்குவிக்கவும், சிஐசிடி சார்பில் கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், குறுகியகாலத் திட்டங்கள், திருக்குறள் மொழிபெயர்புபோன்றவை செய்யப்பட்டன.
ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்:காங்கிரஸ் கட்சிக்கு சிஆர்பிஎப் பதில்
செம்மொழியான தமிழின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கும், புதுடெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கும், பாலி மொழி, பிராகிருத மொழி மற்றும் இலக்கியத்துக்காகவும் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அதில் கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1,488.90 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ரூ.74.10 கோடி ஒதுக்கியுள்ளது.
அதன் விவரங்கள் வருமாறு
ஆண்டு |
தமிழ் மொழி(நிதி ஒதுக்கீடு லட்சங்களில்) |
சமஸ்கிருதம்(நிதி ஒதுக்கீடு லட்சங்களில்) |
2014-15 |
827.36 |
12580.00 |
2015-16 |
1199.68 |
16147.36 |
2016-17 |
510.44 |
14919.74 |
2017-18 |
1067.63 |
19831.06 |
2018-19 |
465.25 |
21437.99 |
2019-20 |
980.78 |
24699.28 |
2020-21 |
1173.00 |
19285.07 |
2021-22 |
1186.15 |
19883.16 |