Rahul Gandhi: ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்:காங்கிரஸ் கட்சிக்கு சிஆர்பிஎப் பதில்
விதிமுறைகளின்படி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு அனைத்து பாதுகாப்பும் செய்யப்பட்டது, ஆனால், ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை மீறினார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின்படி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு அனைத்து பாதுகாப்பும் செய்யப்பட்டது, ஆனால், ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை மீறினார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) நிர்வாகிகளின் 28 இடங்களில் என்ஐஏ ரெய்டு
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் வந்தபின் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடும், அத்துமீறல்களும் நடந்தன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், ராகுல் காந்தியை விட்டு குறிப்பிட்ட தொலைவு யாரையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ளவும் தவறிவிட்டார்கள். ராகுல் காந்தி இசட்பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்.
இதனால் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், ராகுல் காந்தியைச் சுற்றி அரணாக இருந்து அவருக்கு அருகே யாரும் வரவிடாமல் தடுத்தார்கள். ஆனால், டெல்லி போலீஸார் இதை பார்த்துக்கொண்டு மவுனமான பார்வையாளர்களாக நின்று இருந்தார்கள்” எனத் தெரிவித்திருந்தார்
இதற்கு சிஆர்பிஎப் சார்பில் அதிகாரிகள் கூறுகையில் “ ராகுல் காந்தி பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. விதிமுறைகள்படி எந்தவகையான பாதுகாப்பு தரமுடியுமோ அந்த பாதுகாப்பு ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தி தரப்பில் அவ்வப்போது பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்தன.
ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு, அத்துமீறல்!அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
அந்த நேரத்தில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்கக் கோரி தெரிவிக்கப்பட்டது.
2020ம் ஆண்டில் ராகுல் காந்தி தரப்பில் 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறிய சம்பவங்கள் நடந்தன. டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரை வந்தபோது, ராகுல் காந்தி பாதுகாப்பு விதிகளை மீறினார், அவருக்கு பாதுகாப்பு வழங்கிய சிஆர்பிஎப் கொண்ட இசட்பிரிவு இந்த விவகாரத்தை தனியாக எடுத்துக் கவனிக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சிஆர்பிஎஃப், மாநில காவல்துறை மற்றும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செய்தது. டிசம்பர் 24ம் தேதி நிகழ்ச்சிக்கு முன்கூட்டிய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
ராகுல் காந்தி பேரணியின் போது அனைத்து பாதுகாப்பு விதிகளும் முறைப்படி பின்பற்றப்பட்டன. போதுமான அளவு பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளது