Vande Bharat Express:மேற்கு வங்கத்துக்கு முதல் வந்தே பாரத் ரயில்: 30ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மேற்கு வங்க மாநிலத்துக்கு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கிழக்கு மண்டல ரயில்வே தெரிவித்துள்ளது.

PM Modi will launch West Bengal's inaugural Vande Bharat Express on December 30.

மேற்கு வங்க மாநிலத்துக்கு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கிழக்கு மண்டல ரயில்வே தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் இருந்து ஜல்பைகுரி வரை இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதிகவேகம் செல்லக்கூடிய, பயணிகளுக்கான அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் இரு வழித்தடங்களுக்கு இடையே7.5 மணிநேரம் பயணிக்கும் 

விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது !! எந்த நாடு தெரியுமா?

கிழக்கு மண்டல ரயில்வே செய்தித்தொடர்பாளர் கலாபா சக்ரவர்த்தி கூறுகையில் “ வரும் 30ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த ரயில் ஹவுரா முதல் ஜல்பைகுரி வரைசெல்லும். இரு வழித்தடங்களுக்குஇடையே இந்த ரயில் 7.5 மணிநேரம் பயணிக்கும், வாரத்தில் 6 நாட்கள் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.கொல்கத்தா மற்றும் சிலிகுரி இடையேயும், வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் நேரத்தையும், இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறைக்கும். 

ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து காலை 6மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜல்பைகுரிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடையும். அங்கு ஒரு மணிநேரத்துக்குப்பின், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹவுரா வந்து சேரும். இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்து பெட்டிகளும், லிலிவு லோகோ நிலையத்திலிருந்து வந்து விட்டன” எனத் தெரிவித்தார்

உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் - பிரதமர் மோடி உரை

தமிழகத்தை மையமாக வைத்து சென்னை-பெங்களூரு-மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டின் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த நவம்பர் மாதம் இயக்கப்பட்டது.

குஜராத்தில் காந்தி நகர் முதல் மும்பை இடையே 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், இமாச்சலப்பிரதேசத்தின் உனா முதல் டெல்லி வரை 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார்.

புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் 2.0 ரயில்கள் முன்பு இருந்த ரயிலை விட மேம்படுத்தப்பட்டவை. குறைவான நேரத்தில் அதிகமான வேகத்தை எட்டும் வகையில் வந்தே பாரத் ரயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ரயில்கள் மோதுவதை தவிர்க்கும் தொழில்நுட்பமான டிசிஏஎஸ் முறை அதாவது கவாச் முறைய இதில் செயல்படுத்தப்படுகிறது. திடீரென ஏதாவது கோளாறு ஏற்பட்டால், 3 மணிநேரம் வரை பெட்டிகளில் மின்சாரம் கிடைக்கும் வகையில் பேக்அப் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரயிலில் உள்புறமும், வெளிப்புறமும் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. பெட்டியில் உள்ள உதவியாளரை, பாதுகாப்பாளரை பயணிகள் உதவிக்கு அழைக்கும் வகையில் ஆட்டோமேட்டிங் வாய்ஸ் ரெக்கார்டிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios