One week time period for rajinkanth high court order

காலா பட வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் சிங் பதிலளிக்க மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலா திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சென்னை, 6-வது உதவி உரிமையியல் நீதிமன்றம் கூறியுள்ளது.

காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தை, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த நிலையில், ஜி.எஸ்.ஆர். விண்மீன் நிறுவன உரிமையாளர் கே. ராஜேசேகரன் என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

காலா என்கிற கரிகாலன் படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கரு அனைத்தும் என்னுடையது என்றும். இந்த தலைப்பை ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளேன் என்று அதில் கூறியிருந்தார்.

தற்போது எனது தலைப்புடனும் கதைக்கருவுடனும் மறுபதிப்பு செய்து படமாக எடுக்கப்பட்டு வருகிறது. காலா படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள நிலையில் படப்பிடிப்பு தொடர தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் கடந்த மாதம் 15 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பதிலளிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று ரஜினி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தார்கள். இதனைக் ஏற்றுக் கெர்ணட நீதிபதி, ரஜினி தரப்பு பதிலளிக்க 2-வது முறையாக அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.