பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம்: அண்ணாமலை பேச்சு

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்றுவோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Once BJP comes to power, we will remove Periyar statue in Srirangam: Annamalai sgb

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்றுவோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஶ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். "இந்த ஶ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்திலேயே பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும்பொழுது முதல் வேலை அந்தக் கம்பரத்தை அப்புறப்படுத்துவது" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்கு! வெறும் 2.72 லட்சம் தான்!

மேலும், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும், திருவள்ளுவர் சிலை வைக்கப்படும் என்றும் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் சிலை வைப்போம் என்றும் கூறினார்.

"கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியில் அகற்றுவோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும்" என்று குறிப்பிட்டார்.

"அதேபோல இந்து அறநிலையத்துறை என்கிற அமைச்சரவையும் இருக்காது. இந்துசமய அறநிலையத்துறையின் கடைசிநாள், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும்." எனவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

தீபாவளி பரிசு! தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios