தமிழக-கேரள எல்லையில் கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா.! வெகு விமர்சையாக நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி
தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பளியங்குடியில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
மங்கலதேவி கண்ணகி கோவில்
தமிழக-கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியிலுள்ள 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவிலில் வரும் மே 5 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் கண்ணகி தெய்வம் தினமான சித்ராபவுர்ணமி அன்று விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழக பக்தர்கள் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியங்குடியிருப்பு பகுதியில் இருந்து 6 கி.மீ. தூரம் கோவிலுக்கு நடந்து சென்று வழிபட்டனர். மேலும் கேரள மாநிலம் குமுளியிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் வனப்பகுதி வழியாக செல்ல சாலை வசதி உள்ளது. கண்ணகி கோயில் கேரளாவிற்கு உரியது என வனத்துறை தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
WATCH : கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழை - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!!
சித்திரை-கொடியேற்று விழா
இந்தநிலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாகவே தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் அருகில் உள்ள பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் விழாவிற்கான கொடிமரம் நட்டு, கண்ணகி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோன்று இந்த ஆண்டு தேனி மாவட்டம் கூடலூர்,லோயர்கேம்ப் அருகே உள்ள பளியன்குடியில் கண்ணகி உருவம் பதித்த கொடியுடைய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடி மரத்தினை நட்டு மங்கலதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றப்பட்டு பின்பு கொடிக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் கண்ணகி அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள், பளியங்குடி மக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்
ஜப்பான், சிங்கப்பூருக்கு பறக்க திட்டமிடும் மு.க.ஸ்டாலின்.? வெளிநாடு முதலீடுகள் ஈர்க்க திட்டம்