Asianet News TamilAsianet News Tamil

மெட்ரோ ரயிலில் மீண்டும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம்..! எந்த தேதியில் தெரியுமா.? வெளியான அறிவிப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி அன்றும் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 

On the 17th there is a chance to travel by metro train at a fare of 5 rupees KAK
Author
First Published Dec 15, 2023, 11:36 AM IST

5 ரூபாயில் மெட்ரோ பயணம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் மிகப்பெரிய வரமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகளவில் இருந்த இருந்ததால் போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் தயங்கினர். இதனையடுத்து சற்று பயண கட்டணம் குறைந்ததால் மக்கள் அதிகளவு மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிளையொட்டி மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.

On the 17th there is a chance to travel by metro train at a fare of 5 rupees KAK

மீண்டும் வாய்ப்பு வழங்கிய மெட்ரோ

இந்நிலையில், MICHAUNG புயல் மற்றும் கனமழை காரணமாக (03.12.2023 அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

On the 17th there is a chance to travel by metro train at a fare of 5 rupees KAK

பயணிகளுக்கு சலுகை

பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. எனவே இதனை மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios