ஆம்னி பேருந்து கட்டணம் இதுதான்.. சங்கத்தினர் வெளியிட்ட கட்டண பட்டியல் - பார்த்தால் லைட்டா தலை சுத்துது!
தமிழகத்தில் ஒரு தொடர் பிரச்சனையாக மாறியுள்ளது ஆம்னி பேருந்து கட்டணம் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால் 120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்தது.

இதனை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பு, வெளியூர் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஆனால் அதன் பிறகு இந்த வேலை நிறுத்தப்போராட்டம் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்து சேவை இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பை இன்று மதியம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தது..
தொடர் விடுமுறை எதிரொலி; குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்
"ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்துகொள்வது என்னவென்றால், இன்று வெளியான தகவலுக்கும் நமது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதையும், எங்களிடம் இது குறித்து யாரும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் நமது தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்த 80% பேருந்துகளும் இன்று கட்டாயம் வழக்கம்போல் இயங்கும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம் என்றும் அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கட்டண விவரம்.. சென்னையில் இருந்து செல்ல..
திருச்சிக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 1610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 2430 ரூபாய்
கோவைக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 2050 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 3310 ரூபாய்
மதுரைக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 1930 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 3070 ரூபாய்
திருநெல்வேலிக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 2380 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 3920 ரூபாய்
தூத்துக்குடிக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 2320 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 3810 ரூபாய்
நாகர்கோவிலுக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 2610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 4340 ரூபாய்
சேலத்திற்கு : குறைந்தபட்ச கட்டணம் - 1650 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 2500 ரூபாய்
தஞ்சாவூருக்கு : குறைந்தபட்ச கட்டணம் - 1650 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் - 2500 ரூபாய்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதில் குறைந்தபட்ச கட்டணம் என்பது படுக்கை வசதி இல்லாத, குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் என்றும். அதிகபட்ச கட்டணம் என்பது படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெருந்திற்கு என்றும் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் சற்று முன்னதாக புக் செய்தால், இந்த காசுக்கு விமானத்தில் சென்று வரலாம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
பயிர்களை மாடுகளுக்கு இறையாக்கிய ஆசாமி? விவசாயிகள் மாடுகளை சிறை பிடித்ததால் பரபரப்பு