பயிர்களை மாடுகளுக்கு இறையாக்கிய ஆசாமி? விவசாயிகள் மாடுகளை சிறை பிடித்ததால் பரபரப்பு

அரியலூர் மாவட்டத்தில் வயலில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மேய்ந்த வளர்ப்பு மாடுகளை விவசாயிகள் கட்டி வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

farmers caught cow which eat paddy at agricultural land in ariyalur district vel

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சுற்றி கரும்பு, மக்காச்சோளம், கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மாடுகளால் பயிர்கள் மேயப்பட்டு சேதம் அடைந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மேய்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை சிறை பிடித்து ஒரே இடத்தில் கட்டி வைத்தனர். 

அரசுப் பேருந்தில் தீ விபத்து; நடு ரோட்டில் அலறியடித்து ஓடிய பயணிகள் - சேலத்தில் பரபரப்பு

அனைத்து மாடுகளும் அதே பகுதியைச் சேர்ந்த பிரித்வி ராஜன் என்பவருக்கு சொந்தமானது எனவும், இரவு நேரத்தில் மாடுகளை அவிழ்த்து விடுவதால் வயல்களில் மேய்ந்து  தங்களுக்கு பெரும்  நட்டத்தை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து சாமி தரிசனம்

இந்நிலையில் பல ஆயிரங்களை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள தங்களது வயல்களை ஒரு குறிப்பிட்ட நபரின் மாடுகள் மேய்ந்து நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற செயல்களில் பிரித்திவிராஜன் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவரிடம் எழுதி வாங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios