Asianet News TamilAsianet News Tamil

பழைய சோறு கஞ்சி ரூ.250..! “ஹெல்த் டிரிங்னு” சூப்பர்மார்க்கெட்டில் அதிரடி விற்பனை..! 

old type of health rice became in bottle for sale in the supermarket
old type of health rice became in bottle for sale in the supermarket
Author
First Published Oct 14, 2017, 2:51 PM IST


பழைய சோறு கஞ்சி ரூ.250..! “ஹெல்த் டிரிங்னு” சூப்பர்மார்க்கெட்டில் அதிரடி விற்பனை..! 

கூழானாலும் குளித்து குடி....கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழமொழி கேள்வி பட்டிருப்போம்.இந்த பழமொழிக்கு ஏற்ப,மக்கள் பழைய சாதத்தை தான் விரும்பி உண்டு வந்தனர். அதாவது இப்ப இல்லை....முன்பொரு காலத்தில்.....அதாவது,

அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்...வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடிபெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல... 100 சதவிகிதம் உண்மை. 'ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்பதில் மாற்றம் இல்லை.  

பழைய சாதம்  என்றால்  என்ன ?

'சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். 
பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்'  என்பது   குறிப்பிடத்தக்கது.

old type of health rice became in bottle for sale in the supermarket

இதெல்லாம்  ஓகே. இப்ப என்ன  சொல்ல  வரீங்கன்னு  கேட்க  தோணுதா?

ஆமாம் ....நம்ம ஊரு பழங் கஞ்சிய Morning Riceனு ஆட்டய போட்டு புட்டி ரூ 250க்கு விற்கிறாங்க....

இனி கார்போரேட் காப்பிரைட் பண்ணி கஞ்சிக்கும் ஆப்பு வைப்பானோ? என  மக்கள் ஆச்சர்யபடுகின்றனர்

இன்னும்  எந்தெந்த  மாற்றம் வர  போகிறதோ......

old type of health rice became in bottle for sale in the supermarket

டெங்குவிற்கு  எப்படி நிலவேம்பு கசாயமோ .....அதே   மாதிரி  எந்த நோயும் வராமல் இருக்க நாம  நம்ம  பழைய கஞ்சிக்கே  மாறி விடலாம் .....இல்லை என்றால், அதிலும்  கெமிக்கல் கலந்து தற்போது விற்பனைக்கு வரை  சென்றுள்ள  பழைய கஞ்சி மூலம் மக்களை  எப்படி எல்லாம்  ஏமாற்ற  போகிறார்களோ .........

Follow Us:
Download App:
  • android
  • ios